×

அனுமதி இன்றி ஜவுளிக்கடை நடத்திய மண்டபத்திற்கு சீல்

விழுப்புரம், ஜன. 9: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஜவுளிக்கடை நடத்தி வந்த திருமண மண்டபத்திற்கு வருவாய், நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். விழுப்புரம் நகரில் திருமண மண்டபங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜவுளி, பாத்திரக்கடைகள் சலுகை விலை விற்பனை என்றுகூறி நடத்தி வருகின்றனர். இதனால் வழக்கமான வணிக நிறுவனங்களில் விற்பனை பாதிப்பதாக கூறி வணிகர் சங்கத்தினர் நேற்றுமுன்தினம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். அதில், மார்கழி மாதத்தில் கல்யாண மண்டபங்கள் வெறிச்சோடி இருப்பதால் வருவாய்க்காக எந்தவித அனுமதியும், அரசுக்கு வரி ஏதும் கட்டாமல் தற்காலிக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருவதாக புகார் அளித்தனர்.

இதைதொடர்ந்து நேற்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையை மூடி சீல் வைப்பதற்காக தாசில்தார் கனிமொழி மற்றும் நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அப்போது, மண்டபத்தின் மேலாளர் மற்றும் கடை உரிமையாளரிடம் சீல் வைக்க போவதாகவும், நகராட்சிக்கு கடை செயல்படுவதற்கான தற்காலிக அனுமதி பெறவில்லை என்று கூறினர். அப்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, அவர்கள் உதவியுடன் மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

The post அனுமதி இன்றி ஜவுளிக்கடை நடத்திய மண்டபத்திற்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Viluppuram Nagar ,Pongal festival ,
× RELATED கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை