×

நவம்பரில் தங்கம் இறக்குமதி ரூ.1.26 லட்சம் கோடியா? ரூ.84,505 கோடியா?: ஒன்றிய அரசு புள்ளிவிவரத்தில் குளறுபடி

புதுடெல்லி : கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியா ரூ.1,26,403 கோடி மதிப்புக்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதிகப்படியான தங்கம் இறக்குமதி மிக பெரிய வர்த்தக பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒன்றிய அரசு நவம்பர் மாதத்திற்கான தங்க இறக்குமதி ரூ.84,505 கோடிதான் என்று புதிய புள்ளிவிவரத்தை நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கம் இறக்குமதியில் அசாதாரணமான உயர்வை கவனத்தில் கொண்ட ஒன்றிய வர்த்தக அமைச்சகம் அந்த மாதத்திற்கான தங்க இறக்குமதி தரவுகளை மீண்டும் ஆராய்ந்தது.

வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவான வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம்(டிஜிசிஐஎஸ்) கடந்த நவம்பர் மாதத்திற்கான தங்க இறக்குமதி கணக்கில் திருத்தம் செய்து ரூ.42,940 கோடி குறைத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியில் திடீரென ரூ.42,490 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post நவம்பரில் தங்கம் இறக்குமதி ரூ.1.26 லட்சம் கோடியா? ரூ.84,505 கோடியா?: ஒன்றிய அரசு புள்ளிவிவரத்தில் குளறுபடி appeared first on Dinakaran.

Tags : Union Government ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்...