- யூஜிசி
- மார்க்சியவாதிகள்
- புது தில்லி
- பொலிட்பீரோ
- மார்க்சிஸ்ட் கட்சி
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
- யூனியன் அரசு
- தின மலர்
புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) வரைவு விதிமுறையில், அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநிலங்களின் உரிமையை நேரடியாக தாக்கும் அம்சத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்க ஆளுநர் மூலமாக காய் நகர்த்துவது தெளிவாக தெரிகிறது.
இந்த விதிமுறைகள் அரசியலமைப்பு நிலைப்பாட்டை மீறுவதாக உள்ளது. எனவே பாஜ அல்லாத அனைத்து மாநில அரசுகளும் பிற அனைத்து ஜனநாயக பிரிவுகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான விதியை எதிர்க்க வேண்டும். இந்த வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post மாநில உரிமைகள் மீதான தாக்குதல்; யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.