×

உ.பி. மகா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை மகா கும்பமேளா நடக்கிறது. இந்நிலையில், தெய்வீக உத்தர பிரதேசம் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரை என்ற தலைப்பில் பிரபல ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த கும்பமேளாவானது, இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும். 2024ம் ஆண்டு, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 16 கோடி பக்தர்கள் வந்தனர்.

ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அயோத்திக்கு 13.55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். 2019ம் ஆண்டில் மகா கும்பமேளாவால் ரூ.1.2 லட்சம் கோடி வருவாய் மாநிலத்திற்கு கிடைத்தது. இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்’ என்றார். மேலும், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால், இந்தியாவின் ஆன்மீக வேர்கள் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. நாடு பெருமையுடனான பாரம்பரியத்தினை தழுவுவதற்காக உத்வேகம் ஏற்படுத்திய பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டினார்.

The post உ.பி. மகா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் appeared first on Dinakaran.

Tags : UP Maha Kumbh Mela ,Chief Minister ,Yogi Adityanath ,Lucknow ,Maha ,Kumbh Mela ,Uttar Pradesh ,
× RELATED பதவி உயர்வில் முறைகேடு புகார்...