×

எழுதி கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு கண்டனம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் இருக்கும்போது பதாகை ஏன் காட்டுனீங்க என்று அதிமுகவினருக்கு கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநர் உரையை டிடி பொதிகை நேரலை செய்ய அனுமதிக்காதது ஏன் எனவும் விளக்கம் அளித்தார்.

அதாவது “ஆளுநர் உரையின்போது டிடி பொதிகை டிவி மூலம் வெட்டி ஒட்ட முயற்சி நடந்தது. வெட்டி, ஒட்டுவார்கள் என முன் கூட்டியே கண்டுபிடித்ததால் பொதிகைக்கு நேரலை தரப்படவில்லை. 3 நிமிடங்கள் ஆளுநர் அவையில் இருந்தார். அதன் பின் ஆளுநர் வெளியேறிவிட்டார். பொதிகைக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. பொதிகை மூலம் நினைத்ததை நடத்த முடியவில்லை என்பதால் ஆளுநர் பதிவிட்டிருக்கிறார்.

ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர கோரிக்க வைக்க முடியாது. எழுதி கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை” எனத் தெரிவித்தார்.

The post எழுதி கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Speaker ,Chennai ,Governor R. N. ,Ravi ,Commissioner ,
× RELATED சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக...