×

கேரட் கேக்

தேவையான பொருட்கள்

பால்-1/2 லிட்டர்.
தயிர்-2 தேக்கரண்டி.
சன்பிளவர் ஆயில்-75 ml.
வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி.
நாட்டுச்சர்க்கரை-1 கப்.
கோதுமை மாவு-1 ½ கப்.
உப்பு-1 சிட்டிகை.
பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.
பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.
சுக்குத்தூள்-1/2 தேக்கரண்டி.
பட்டைத்தூள்-1 தேக்கரண்டி.
வால்நட்-1 கைப்பிடி.
உலர்ந்த திராட்சை-10.
எழுமிச்சை தோல்-சிறிதளவு.
கேரட்-2.
வெண்ணெய்-சிறிதளவு.

செய்முறை:

முதலில் ஒரு பவுலில் ½ லிட்டர் பால், 2 தேக்கரண்டி தயிர், 75ml சன்பிளவர் ஆயில், 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ், 1 கப் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.1 ½ கப் கோதுமை மாவு, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ½ தேக்கரண்டி பேக்கிங் சோடா, ½ தேக்கரண்டி சுக்குத்தூள், 1 தேக்கரண்டி பட்டைத்தூள் சேர்த்து கலந்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.இப்போது இதை கலந்து வைத்திருக்கும் கலவையுடன் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்துவிட்டுக் கொள்ளவும். இதில் 1 கைப்பிடி வால்நட், உலர்ந்த திராட்சை 10, சீவிய எழுமிச்சை தோல் சிறிதளவு. இத்துடன் துருவி வைத்திருக்கும் கேரட் 2 சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். ஓவனை பத்து நிமிடம் பிரீ ஹீட் செய்துக்கொள்ளவும். கேக் டின்னில் வெண்ணெய்யை தடவிய பிறகு கலந்து வைத்திருக்கும் மாவை சேர்த்து ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான கேரட் கேக் தயார்.

The post கேரட் கேக் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைத்தண்டு லெமன் ரசம்