×

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடம்

கொள்ளிடம்,ஜன.3: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் மற்றும் காட்டூர் ஆகிய கிராமங்களில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுவிநியோக கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் காட்டூர் ஊராட்சியில் ரூ.9 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுவிநியோக கட்டிடம் ஆகியவௌகளை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சன்,உமாசங்கர், ஒன்றிய பொறியாளர் தாரா, ஊராட்சி மன்ற தலைவர்கள் வினோஷாகருணாகரன்,வடிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜய பாரதிகென்னடி, ஒன்றியக்குழு உறுப்பினர் லெட்சுமிபாலமுருகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Achalpuram ,Kollidam ,Minister ,Meiyanathan ,Kattur ,Achalpuram panchayat ,Mayiladuthurai district… ,
× RELATED வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்