திருமங்கலம், ஜன. 7: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் நேற்று முன்தினம் ஜன.5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஒன்றிய தலைவர், ஊராட்சி தலைவரின் அறைகள் பூட்டப்பட்டன.
திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் தலைவரின் அறையை நேற்று ஊழியர்கள் கதவை மூடி பூட்டு போட்டனர். மீண்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று தலைவர், கவுன்சிலர்கள் பொறுப்புக்கு வரும்போது அவர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அது வரையில் இது அலுவலக பணிக்காக பயன்படுத்தப்படும் என ஒன்றிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
The post திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பூட்டு appeared first on Dinakaran.