×

செயல்படாத தகவல் ஆணையத்தால் என்ன பயன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: மத்திய தகவல் ஆணையம் மற்றும் பல மாநில தகவல் ஆணையங்களில் ஆணையர்கள் பதவிகள் பல மாதங்களாக நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘இந்த மனுக்கள் அனைத்தும் முகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

ஆனால் இதனை பட்டியலிட்டு விசாரணைக்கு எட்க்கவே ஓராண்டு ஆகிவிட்டது. மேலும், ஒன்றிய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் ஆணையர்கள் பணி நியமனம் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் தகவல்களை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘செயல்படாமல் உள்ள தகவல் ஆணையத்தால் என்ன பயன் ?. மேலும் ஒன்றிய தகவல் ஆணையத்தில் பத்து ஆணையர்கள் இருக்க வேண்டிய நிலையில், இரண்டு பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.

குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் காலி பணியிடங்களுக்கு விளம்பர செய்யப்பட்டும் ஏன் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசுக்கு கேள்வியெழுப்பிய நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேப்போன்று மாநிலங்களில் காலியாக உள்ள ஆணையர்களின் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்தும் அம்மாநில தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post செயல்படாத தகவல் ஆணையத்தால் என்ன பயன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Information ,Supreme Court ,Union Government ,New Delhi ,Central Information Commission ,State Information ,Justices ,Suryakanth ,N.K. Singh… ,Dinakaran ,
× RELATED முல்லைப்பெரியாறு அணை வழக்கு.. தேசிய...