பெங்களூரு: இந்தியாவில் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை விரிவுபடுத்த ரூ.25,700 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறி உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெள்ளா நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட நாதெள்ளா, ‘‘இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பரவல் சிறப்பாக உள்ளது. 20230ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி பேருக்கு ஏஐ திறன்களை பயிற்றுவிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. மேலும், ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங் திறன்களை ஊக்குவிக்க ரூ.25,700 கோடி முதலீடு செய்ய உள்ளோம்’’ என்றார்.
The post இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்திற்காக ரூ.26,000 கோடி முதலீடு மைக்ரோசாப்ட் திட்டம் appeared first on Dinakaran.