×

எதிர்க்கட்சிகளின் விஷம பிரசாரத்தை முறிக்கும் மூலிகையை முதல்வர் வைத்துள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: சென்னை திருவிக. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் இன்று 5வது நாளாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேயர் பிரியா ஆகியோர் இன்று காலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது மேயர் பிரியா கூறியதாவது; ஒவ்வொரு வார்டுக்கும் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம். இன்றைய தினம் பள்ளிக்கூடம், கோயில், பொது இடங்களில் உள்ள பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து பொது மக்களிடம் நேரில் கேட்டறிந்தோம். வட சென்னையில் தொடங்கி இருக்கக்கூடிய இந்த கள ஆய்வு மத்திய சென்னை, தென் சென்னை பகுதிக்கு உட்பட்ட வார்டுகளிலும் அடுத்தடுத்து மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு கூறினார்.

இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; நாங்கள் சுதந்திரமாக வருகிறோம், மக்களோடு ஒன்றிணைந்து இருக்கக்கூடிய கட்சி திமுக. கால்படாத சாலைகளே இல்லை என்ற வகையில் பயணிப்பவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். இறக்குமதி செய்யப்பட்டவர் அல்ல, எங்கள் தலைவர், எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் திறந்தபுத்தகமாக இருக்கக்கூடிய திமுகவும் திராவிட மாடல் அரசும் சந்திக்க தயாராக இருக்கிறது. விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கிறார்கள். அந்த விஷத்தை முறிக்கின்ற மூலிகையை முதலமைச்சர் கையில் எடுத்துள்ளார். எல்லா சூழ்நிலையிலும் அசாதாரண சூழ்நிலையிலும் சமாளிக்கக்கூடிய ஒருவர்தான் தமிழக முதலமைச்சர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post எதிர்க்கட்சிகளின் விஷம பிரசாரத்தை முறிக்கும் மூலிகையை முதல்வர் வைத்துள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,P. K. ,Sekarpapu ,Perampur ,Festival of Chennai ,B. K. SEKARBU ,MAYOR ,PRIYA ,P. K. Sekharbabu ,
× RELATED திருப்போரூர் முருகன் கோயில்...