- சுப்மன் கில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பத்ரினாத் கடம்
- சென்னை
- பத்ரிநாத்
- சுப்மான் கில்
- பார்டர்லேண்ட்ஸ் கவாசாகி டிராபி தொடர்
- தின மலர்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் வீரர் பத்ரிநாத் குற்றம்சாட்டியுள்ளார். சுப்மன் கில் தமிழ்நாட்டவராக இருந்திருந்தால் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்கமாட்டார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்நதது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்திய அணி நழுவ விட்டது. இந்திய ணியில் மூத்த வீரர்கள் மட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கான வீரர் என்று அறியப்பட்டவர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சுப்மன் கில் ஆஸ்திரேலியா மண்ணில் 3 போட்டிகளில் விளையாடி 93 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார் அடித்த ரன்களை கூட இந்திய அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ஆடிய சுப்மன் கில்லால் அடிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் சுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் வெளிநாடுகளில் ஆடிய ஒரு இன்னிங்ஸில் கூட 40 ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகையில்; “இதே சுப்மன் கில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவராக இருந்திருந்தால், நிச்சயமாக இந்திய அணியில் இருந்து சாதாரணமாக நீக்கி இருப்பார்கள். சுப்மன் கில் ஆட்டமிழப்பதை பார்ப்பதற்காக சோகமாக உள்ளது. அந்த அளவிற்கு அவர் பில்டப் கொடுத்ததற்கு ஏற்ப விளையாடவில்லை.
எந்த பேட்ஸ்மேனும் ஆட்டமிழந்து வெளியேறுவார்கள். அது சாதாரண விஷயம் தான். ரன்கள் அடிப்பதும், அடிக்க முடியாமல் போவதும் கிரிக்கெட்டில் சகஜம். ஆனால் களத்தில் எப்படி விளையாடுகிறோம், என்ன மாதிரியான உடல்மொழியை வெளிப்படுத்துகிறோம், என்ன முயற்சிக்கிறோம் என்பது முக்கியம். குறைந்தபட்சம் நம்பர் 3ல் வருவபர் பந்தை தேய்மானம் அடைய வைக்க முயற்சித்திருக்கலாம்.
பவுலர்களை சோர்வடைய வைக்க முயற்சித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அவருக்கு பின் வரும் சக வீரர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். உங்களுக்கு ரன்கள் வரவில்லை என்றாலும் கூட, டிஃபென்ஸ் ஆடி களத்தில் நின்றிருக்க வேண்டும். அதுதான் நம்பர் 3 வீரராக வரும் ஒரு பேட்ஸ்மேனின் பங்களிப்பு. இதனை தான் மார்னஸ் லபுஷேன் செய்து கொடுத்தார்.
ஏன் நேதன் மெக்ஸ்வீனி கூட பந்தை பழையதாக மாற்றவும், பவுலர்களை சோர்வடைய வைக்கவும் முயற்சித்தார். இதுதான் குறைந்தபட்சம் அந்த வீரர்கள் தங்கள் அணிக்கு செய்யும் பங்களிப்பு. ஆனால் சுப்மன் கில் களமிறங்கும் போது பார்ப்பதற்காக அழகாக 2 ஷாட்களை ஆடுகிறார். 4 பேர் தன்னை பற்ற பேச வேண்டும் என்பது போல் நிற்கிறார். கிரிக்கெட் என்பது அப்படி அல்ல.
ஃபீல்டிங்கில் கூட சுப்மன் கில் சரியாக செயல்பட முடியவில்லை. ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்ய முடியவில்லை. பாய்ண்ட், ஷார்ட் லெக்கில் நிற்க முடியவில்லை. அவரால் இந்திய அணிக்கு எந்த பங்களிப்பையும் ஆஸ்திரேலியா தொடரில் செய்ய முடியவில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
The post சுப்மன் கில் தமிழ்நாட்டவராக இருந்திருந்தால் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்கமாட்டார்கள்: பத்ரிநாத் காட்டம் appeared first on Dinakaran.