×

விராட் கோலி, ரோஹித் ஆகியோர் வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கு பயிற்சி இல்லாமல் களமிறங்கினால், அது ஆட்டத்தை பாதிக்கும்: சுனில் கவாஸ்கர்

டெல்லி: வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் துலீப் டிராபியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். விராட் கோலி, ரோஹித் ஆகியோர் வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கு பயிற்சி இல்லாமல் களமிறங்கினால், அது ஆட்டத்தை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “துலீப் டிராபிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை. இதன் மூலம் வங்கதேச டெஸ்ட் தொடரில் பயிற்சி இல்லாமல் விளையாடுவார்கள். முதுகுத்தண்டின் காரணமாக பும்ரா போன்ற ஒரு வீரருக்கு ஓய்வளிப்பது புரிகிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் களத்தில் நேரத்தை செலவிட வேண்டும்.

35 வயதிற்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவது, வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை சந்திக்க உதவுகிறது. நீண்ட இடைவெளி ஏற்பட்டால், அவர்களின் தசை பலவீனமடைகிறது. , கடந்த காலத்தில் அவர்கள் நிர்ணயித்த தரத்தை எட்டுவது சுலபமாக இருக்காது” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

The post விராட் கோலி, ரோஹித் ஆகியோர் வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கு பயிற்சி இல்லாமல் களமிறங்கினால், அது ஆட்டத்தை பாதிக்கும்: சுனில் கவாஸ்கர் appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Rohit ,Bangladesh Test ,Sunil Kawaskar ,Delhi ,India ,Chennai Sepakkam Stadium ,Dulip ,Bangladesh ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான தொடரில்...