சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக மரபை மீறுவதேயே ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளார். அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. தனது அரசியல் சட்டக்கடமையை செய்யவே மனமில்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா. கடந்த ஆண்டுகளில் இருந்ததை ஒட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று கூறினார்.
The post ஜனநாயக மரபை மீறுவதேயே ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.