×

திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி OYO ஹோட்டல்களில் அனுமதி இல்லை: நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி OYO ஹோட்டல்களில் அனுமதி இல்லை என்று புதிய கட்டுப்பாட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. OYO தளத்துடன் இணைந்து செயல்படும் ஹோட்டல்களில் இதுவரையில் திருமணம் ஆகாத ஜோடிகள் அனுமதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இதன் நடைமுறையில் புதிய மற்றம் கொண்டுவரப்பட்டு ஜோடிகள் ஹோட்டல்களில் முன்பதிவு செய்யும் போது தங்கள் உறவு குறித்த அடையாள அட்டையை கட்டாயம் வழங்க வேண்டும் என்று OYO தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இந்த நடைமுறை உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக பெரும் நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. OYO ஹோட்டல்களில் திருமணமாகாத ஜோடிகள் எந்த கேள்விகளும் இன்றி அனுமதிக்கப்பட்டு வந்ததற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த புதிய கட்டுப்பாட்டை OYO நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

 

The post திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி OYO ஹோட்டல்களில் அனுமதி இல்லை: நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,OYO ,Dinakaran ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...