- அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி
- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- திருவண்ணாமலை
- பொது பணிகள்
- பேரறிஞர் அண்ணா
- திருவண்ணாமலை...
திருவண்ணாமலை, ஜன.5: திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலையில் பள்ளி மாணவ – மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலையில் தொடங்கி, கலெக்டர் அலுவலகம் வரை நடந்தது. சைக்கிள் போட்டியின் தொடக்க விழாவுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைக்கிள் போட்டியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு, வயது வரம்பு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ₹5 ஆயிரம், இரண்டாம் பரிசு ₹3 ஆயிரம், மூன்றாம் பரிசு ₹2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ₹250 பரிசுத்ெதாகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில கைப்பந்து சங்க துணைத் தலைவர் இரா.ஸ்ரீதரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் நோய்லின்ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post அறிஞர் அண்ணா சைக்கிள்போட்டி * அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் * வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.