×

மாசற்ற இருதய ஆலய ஆண்டு பெருவிழாவில் தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு வேட்டவலம் புனித மரியாவின்

கீழ்பென்னாத்தூர், ஜன. 5: வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய ஆண்டு பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக கடந்த 1ம் நற்கருணை பெருவிழாவும், 2ம் தேதி வேட்டவலம் மலையில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் புனித சூசையப்பர் திருத்தல ஆண்டுப் பெருவிழா நடந்தது. இதில் வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலய அதிபர் ஜோ லூர்துசாமி தலைமை தாங்கி சிறப்பு ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை அமுதன் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் புனித சூசையப்பரின் ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய வீதிகளின் வழியே நடந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் 3ம் தேதி புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவிற்கு வேலூர் மறைமாவட்ட புதிய ஆயர் அம்புரோஸ் பச்சைமுத்து தலைமை தாங்கி ஆலயத்தின் சார்பில் ₹12 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட புதிய தேர் மற்றும் தேர் நிறுத்தும் அறை ஆகியவற்றை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். தொடர்ந்து ஆடம்பர சிறப்பு கூட்டு திருப்பலியினை நிறைவேற்றி 26 கத்தோலிக்க சிறுவர், சிறுமியர்களுக்கு நற்கருணை, உறுதிப்பூசுதல், அருளடையாளங்கள் வழங்கினார்.

விழாவில் வேலூர் மறை மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட், வேட்டவலம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை அமுதன் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் புதிய தேரில் புனித மரியாவின் ஆடம்பர தேர்பவனி ஊர்வலம் வானவேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியே நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புனித மரியாவை வழிபட்டனர். கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த ஆண்டு பெருவிழா நேற்று காலை உதவி பங்குத்தந்தை அமுதன் தலைமையில் நடந்த சிறப்பு நன்றி திருப்பலி,மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

The post மாசற்ற இருதய ஆலய ஆண்டு பெருவிழாவில் தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு வேட்டவலம் புனித மரியாவின் appeared first on Dinakaran.

Tags : Christians ,Immaculate Heart Church ,Vettavalam ,St. ,Mary ,Kilpennathur ,Immaculate ,Heart Church ,St. Mary ,Eucharist ,
× RELATED அன்பின் பாதையை நெறி தவறாமல்...