×

திருமாநிலையூர் பணிமனை அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சரி செய்ய கோரிக்கை

 

கரூர், ஜன. 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் அரசு பேருந்து பணிமனை அருகே ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் திருமாநிலையூரில் அரசு பேருந்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியின் வழியாக கரூரில இருந்து மதுரை -பைபாஸ் சாலை வரை அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பணிமனையின் எதிரே சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

The post திருமாநிலையூர் பணிமனை அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirumanilayur ,Karur ,Thirumaniliur Government ,Karur Municipality ,Government Bus Workshop ,Karur Thirumanaiur ,Karurila ,Thirumaniliur ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை