×

அரவக்குறிச்சியில் வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்து அதிகரிப்பு

 

அரவக்குறிச்சி, ஜன. 5: அரவக்குறிச்சி பகுதியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கிறது. போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். மோட்டார் வாகன சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிறுவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

அரவக்குறிச்சியில் கடந்த இரண்டாண்டாக போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லை. இதனால் சிறுவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பெற்றோர்களும் கண்டிப்பதில்லை. இதனால் நாளுக்கு நாள் விபத்து அதிகரித்து வருகிறது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

The post அரவக்குறிச்சியில் வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Aravakurichi… ,Dinakaran ,
× RELATED பள்ளபட்டியில் பைக் திருடர்கள் 2 பேர் கைது