- கரூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மோனிகா
- கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம்
- தமிழ்நாடு கூடைப்பந்து அணி
- 49வது தேசிய அளவிலான போட்டி
- ஹைதராபாத்...
- தமிழ்
- தமிழ்நாடு
- தின மலர்
கரூர், ஜன. 7: கரூரைச் சேர்ந்த மாணவி மோனிகா, கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் பயிற்சி பெற்று, தமிழ்நாடு கூடைப்பந்து அணிக்கு தேர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் நடைபெற்ற 49வது தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணிக்காக கலந்து கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கம் வென்ற அணியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய மாணவி மோனிகாவை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்தினார். இந்த நிகழ்வில், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
The post கரூர் மாணவி தமிழ்நாடு கூடைப்பந்து அணிக்கு தேர்வு appeared first on Dinakaran.