கரூர், டிச. 28: கரூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக தனியார் நிறுவன ஊழியர்தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (39). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், இவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் காணப்பட்ட ராஜா, கடந்த 24ம்தேதி, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கினார். ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.