- கேடிசி நகர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராபர்ட் புரூஸ்
- தேசிய உரம் மற்றும் ரசாயனப் பணிக்குழு
- யூனியன் அரசு
- டெல்லி…
- தின மலர்
கேடிசி நகர், ஜன. 7: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உர மானியத்தை அதிகரிப்பதோடு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் ஒன்றிய அரசின் சார்பில் நடந்த தேசிய உரம் மற்றும் ரசாயன செயற்குழுக் கூட்டத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி., வலியுறுத்தினார். டெல்லியில் ஒன்றிய அரசின் சார்பில் தேசிய அளவில் உரம் மற்றும் ரசாயன செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ், தமிழ்நாட்டு விவசாயிகளின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி பேசினார். அப்போது அவர் தமிழக விவசாயிகளுக்கு உர மானியத்தை அதிகரிப்பதோடு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நானோ யூரியாவை தட்டுப்பாடின்றி தாராளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
The post மானியத்தை அதிகரிப்பதோடு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க துரித நடவடிக்கை appeared first on Dinakaran.