- மனிஷா
- திருவல்லூர்
- திருவள்ளூர்
- பராபாட்மிண்டன்
- வீரங்கா
- யூனியன் அரசு
- பாராலிம்பிக்ஸ்
- ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
திருவள்ளூர்: ஒன்றிய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருது திருவள்ளூரை சேர்ந்த பாராபேட்மின்டன் வீராங்கனை மனிஷாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக பாராபேட்மின்டன் வீரராக உள்ள நிலையில் ஆசிய விளையாட்டு போட்டி, பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர். இவருக்கு விளையாட்டில் முக்கிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்து மனிஷாவை பாராட்டினர். இதுகுறித்து மனிஷா கூறுகையில், ‘ஒன்றிய அரசு அர்ஜுனா விருது அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக ஊக்குவித்த எனது தாய், தந்தையருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அடுத்தடுத்து வெற்றி பெறுவேன். அர்ஜுனா விருதை எதிர்பார்த்தேன். 2028ம் ஆண்டில் தங்கம் வெல்வேன்’ என்றார்.
The post திருவள்ளூரை சேர்ந்த பாராபேட்மின்டன் வீராங்கனை மனிஷாவிற்கு அர்ஜுனா விருது appeared first on Dinakaran.