×

அண்ணா விரைவு சைக்கிள் போட்டி; 169 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

 

கிருஷ்ணகிரி, ஜன.5: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சார்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளை சிறப்பிக்கும் பொருட்டு, மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியை, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுகளில் போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தொடங்கி, தானம்பட்டி வரை சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்த போட்டியில் மொத்தம் 169 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 13 வயதிற்குட்பட்ட பிரிவில் லாவித் கணேஷ் முதலிடம், உதயநிதி 2ம் இடம், வசீகரன் 3ம்இடம், மாணவிகளில் நித்ய முதலிடம், நிதி 2ம்இடம், மோஷிதா 3ம் இடம் பெற்றனர்.

15 வயதிற்குட்பட்ட பிரிவில் தியானேஷ்வர் முதலிடம், முகமது பயாஸ் 2ம் இடம், ஜெகதீஷ் 3ம் இடம், மாணவிகளில் வித்யா முதலிடம், கமலிகா 2ம் இடம், யுவ 3ம்இடம் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட பிரிவில் தருண்குமார் முதலிடம், தர்ஷசன் 2ம்இடம், தாமு 3ம்இடம், மாணவிகளில் சவுமிகா முதலிடம், ஆர்த்தி 2ம்இடம், தன்யா 3ம்இடம் பெற்றனர். முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2ம் இடத்துக்கு ரூ.3 ஆயிரம், 3ம் இடத்துக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், தாசில்தார் வளர்மதி மற்றும் விளையாட்டு பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு அரங்க பயிற்றுநர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

The post அண்ணா விரைவு சைக்கிள் போட்டி; 169 மாணவ, மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Anna Speed Cycle Competition ,Krishnagiri ,Chief Minister ,Perarignar Anna ,Tamil Nadu Sports Development Authority ,Krishnagiri Division ,Krishnagiri District Sports Hall ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி...