×

ெதன்காசியில் தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

தென்காசி, ஜன.3: தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி கிழக்கு கிளையின் சார்பில் ஓரிறை கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தென்காசி கொடிமரம் பகுதியில் நடந்த கூட்டத்துக்கு கிளைத்தலைவர் ராஜா முஹம்மது தலைமை வகித்தார். பேச்சாளர் நபீல் அஹ்மது, மாவட்ட தலைவர் அப்துஸ் ஸலாம் பேசினர். கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயலாளர் முஹம்மது சித்தீக், துணைச்செயலாளர் அப்துல் ஹமீது, துணைத்தலைவர் அப்துல்அஜீஸ், தொண்டரணி செயலாளர் ஜாபர், மாணவரணி செயலாளர் அன்வர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கிளைபொருளாளர் பீர்முஹம்மது நன்றி கூறினார்.

The post ெதன்காசியில் தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thowheed Jamaat ,Tenkasi ,Tamil Nadu Thowheed Jamaat Tenkasi East ,Tenkasi Kodimaram ,Raja Muhammad ,Nabeel Ahmed ,Dinakaran ,
× RELATED திடீரென பெய்த மழையால் நீர்வரத்து...