அண்ணாநகர்: வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சின்னவெங்காயம் தினசரி 300 டன் வருகிறது. இன்று காலை மார்க்கெட்டுக்கு 150 டன் சின்ன வெங்காயம் வந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாயில் இருந்து 120 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாயில் இருந்து 38 ரூபாய்க்கு குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி கடைகளில் ஒரு கிலோ சின்னவெங்காயம் 150 ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைகாயின் வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ முருங்கைகாய் 400 ரூபாயில் இருந்து 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறிகள் விலை விவரம் வருமாறு; ஒரு கிலோ தக்காளி, கோஸ் 20 க்கும் உருளைகிழங்கு 33க்கும் கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் சேன கிழங்கு, இஞ்சி, பீர்க்கங்காய், கோவக்காய், குடை மிளகாய், எலுமிச்சை பழம் ஆகியவை 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ், பட்டாணி, அவரைக்காய் 70 க்கும் சவ்சவ், முள்ளங்கி 25 க்கும் கத்திரிக்காய், காராமணி, பாவற்காய், கொத்தவரங்காய், மாங்காய் ஆகியவை 40க்கும் நூக்கல், பச்சைமிளகாய் காலிபிளவர், சுரைக்காய், புடலங்காய் 30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் எகிறியது: பெரிய வெங்காயம் குறைந்தது appeared first on Dinakaran.