×

சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒருங்கிணையுமா? செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை: சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும், ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தனது குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும், ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். திமுக அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒருங்கிணையுமா? செல்லூர் ராஜூ விளக்கம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sellur Raju ,Madurai ,Former minister ,Edappadi Palaniswami ,Former ,minister ,Madurai Meenakshiamman temple ,New Year ,
× RELATED பாப்கார்னுக்கு 3 விதமான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம்