×

தமிழகத்தில் 17 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்: பதிவுத்துறை தலைவர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 17 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், பெரியநாயக்கன்பாளையம் தற்காலிக இணை சார்பதிவாளர் ரமேஷ் கிருஷ்ணகிரி நிர்வாக சார்பதிவாளராகவும், கோபிசெட்டிபாளையம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் தமிழ்செல்வி பாளையங்கோட்டை வழிகாட்டி சார்பதிவாளராகவும்,

கீழ்ப்பழுர் சார்பதிவாளர் சேசோபா அரியலூர் 1 எண் இணை சார்பதிவாளராகவும், நாகலூர் சார்பதிவாளர் அண்ணாதுரை பெரம்பலூர் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும், திருப்பூண்டி சார்பதிவளர் வாசுதேவன் சென்னை துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலக ஆழ்ந்த சீராய்வு சார்பதிவாளராகவும், தருமபுரி 2 எண் இணை சார்பதிவாளர் மாரியப்பன் மாரண்டஹள்ளி சார்பதிவாளராகவும், பாளையங்கோட்டை முறப்பநாடு சார்பதிவாளர் கண்ணன் குன்றத்தூர் சார்பதிவாளராகவும் காஞ்சிபுரம் 4 எண் இணைசார்பதிவாளர் நெடுஞ்செழியன் செட்டிகுளம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல பல்லாவரம் சார்பதிவாளர் அறிவழகன் புதுக்கோட்டை நிர்வாக சார்பதிவாளராகவும், வேலகவுண்டம்பட்டி சார்பதிவாளர் அருள்குமார் கரூர் அசல் பத்திரப்பதிவு கண்காணிப்பாளராகவும், செங்கல்பட்டு 1 எண் இணை சார்பதிவாளர் அன்பழகன் துவரங்குறிச்சி சார்பதிவாளராகவும், அருப்புக்கோட்டை சார்பதிவாளர் மாலினி ஜெயஸ்ரீ மதுரை தெற்கு புலனாய்வு சார்பதிவாளராகவும்,

தென்காசி 2 எண் இணை சார்பதிவாளர் மதிவாணன் சேத்தூர் சார்பதிவாளராகவும், பெரியகுளம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் சோபனா செங்கல்பட்டு தலைவர் அலுவலக நிர்வாக சார்பதிவாளராகவும், செய்யூர் சார்பதிவாளர் பசுமதி மயிலாடுதுறை சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் 17 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்: பதிவுத்துறை தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Registration Department ,Chennai ,Head ,Dinesh Ponraj Oliver ,Srirangam ,Sub ,Vanitha ,Kanchipuram Administrative Sub-Registrar ,Periyanayakkanpalayam Temporary ,Ramesh… ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 17 சார்பதிவாளர்கள்...