- ஐயப்பன்
- ராஜா
- ராஜசேகரபாண்டியன்
- எருமேலி
- அக்த்கோட்டை
- கலிகாட்டி இரண்டாம் கோட்டை
- உடும்பாறை திருடம்போட்டை
- கரிமலை
- நான்காம்
மன்னர் ராஜசேகரபாண்டியன் காட்டு வழிப்பாதை என்பதால் கையில் குச்சியை எடுத்துக்கொண்டு பூங்காவனம் எனப்படும் பெருவழியில் நடந்தார். அப்படி அவர் சென்ற ஒவ்வொரு மலையும் ஒரு கோட்டையாக கருதப்படுகிறது. அதன்படி எருமேலி முதல்கோட்டை, காளைகட்டி இரண்டாம் கோட்டை, உடும்பாறை மூன்றாம்கோட்டை, கரிமலை நான்காம் கோட்டை, சபரிபீடம் ஐந்தாம் கோட்டை, சரம்குத்தி ஆறாம்கோட்டை, 18 படி ஏழாம் கோட்டை என அழைக்கப்படுகிறது.
முறையான விரதம் இருந்தால் மட்டுமே நுழைய முடியும் என்ற விதியுள்ள பேரூர்தோடு பகுதிக்குள் மன்னர் ராஜசேகரபாண்டியன் வந்தார். முதலில் பேரூர்தோடு என்ற ஆற்று பகுதியில் நீராடிவிட்டு நடையை தொடர்ந்தார். அதன்பிறகு காளைகட்டி ஆசிரமத்தை அடைந்தார், மணிகண்டன், மகிஷியை வதம் செய்து தாண்டவம் ஆடியதை, தனது வாகனமான நந்தி மேல் அமர்ந்து பார்வதி, சிவனும் கண்ட இடம் காளை கட்டி ஆசிரமம் ஆகும். இங்கு முனிவர்கள், ஆசிரமம் (சிவலிங்கம்) அமைத்திருந்ததால் இந்த பெயருடன் அழைக்கப்படுகிறது. இதனால் இங்கிருந்த நந்தியை வணங்கி அவரின் பரிபூரண ஆசிபெற்று நடந்தார்.
அடுத்து வந்தது அழுதா நதி. மகிஷியின் உடல் விழுந்த ஆற்றுப்பகுதி ஆகும். இங்கு நீராடி விட்டு, பூதகணங்கள் செய்தது போன்று, அழுதா நதியில் ஒரு கல்லை எடுத்து நடந்து வந்து இஞ்சிப்பாறைகோட்டை என்ற அழுதா மேட்டை அடைந்தார் மன்னர். அழுதாமேடு (மலை) என்பது கடும் ஏற்றம். இதில் பக்தர்கள் ஏறும்போது அழுது கண்ணீரே வந்துவிடும் என்பதால் இப்பெயர் பெற்றது என்கின்றனர். இங்கு மகிஷியின் உடல் மீது பூதகணங்கள் கல்லை போட்ட வழக்கப்படி, மன்னர் அழுதா நதியில் தான் எடுத்து வந்த கல்லை போட்டார்.
இஞ்சிப்பாறை முதல் பெரியானை வட்டம் வரை புலி, யானை போன்ற காட்டு விலங்குகள் அதிகம் இருக்கும். ஆனால், ஐயப்பன் கட்டளைக்கு பணிந்து விலங்குகள் யாரையும் துன்புறுத்தாது. எனவே அழுதாமேட்டில் உள்ள காவலர் பூதநாதனை வணங்கி மீண்டும் நடந்து முக்குழியை அடைந்தார். அங்கு தாவளம் அமைத்து ஓய்விற்காக தங்கினார் மன்னர். இதனால் இது முக்குழி தாவளம் என பெயர்பெற்றது. மறுநாள் இங்குள்ள காளியை வணங்கி விட்டு புறப்பட்ட மன்னர் அடுத்துள்ள கரியிலம்தோட்டை அடைந்தார். சாமியே சரணம் ஐயப்பா
நாளையும் தரிசிப்போம்.
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
9.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 49: முக்குழியில் தங்கினார் appeared first on Dinakaran.