- ராஜா
- ராஜசேகர்பந்தியன்
- தர்மசஸ்தா
- அச்சங்கோ
- அசீரியன் ஒழுங்கு
- மணிபுரகம்
- சாஸ்தா
- ஐகோயில்
- கேரளா
- ஐயப்பன் தனவோம்
அச்சன்கோவில் அரசன் தர்மசாஸ்தா மற்றும் அவர் ஆசி பெற்ற பரிவார தெய்வங்களை வணங்கி விட்டு மன்னர் ராஜசேகரபாண்டியன் அடுத்து வந்து சேர்ந்த இடம் சாஸ்தாவின் மூன்றாவது சக்கரமாக அமைந்துள்ள மணிப்பூரகம் (நாபி, வயிறு) ஆரியங்காவு. இக்கோயில் கேரள முறைப்படி அமைந்திருந்தாலும் கூட பூஜைகள், சடங்கு, வழக்கங்கள் தமிழக முறைப்படியே நடக்கின்றன. அதற்கு காரணம் உண்டு.
சாஸ்தா, புஷ்கலா தேவிக்கு பூர்வஜென்ம சாபவிமோசனம் அளித்து மனைவியாக ஏற்றுக்கொள்வதற்காக இங்குள்ள கோயிலில் தனது தந்தை சிவன், தாய் பார்வதி ஆகியோருடன் வீற்றிருந்தார். அந்த காலகட்டத்தில் மதுரை நெசவு வியாபாரி ஒருவர் திருவிதாங்கூர் அரண்மனைக்கு துணிகளை நெய்து கொடுப்பது வழக்கம். அதற்காக காட்டுவழி பாதையில் தனது மகள் புஷ்கலாவை துணைக்கு அழைத்து கொண்டு சென்றார். ஆரியங்காவு வந்ததும் ஓய்வு எடுத்தனர். அப்போது அங்கு கோயில் கொண்டிருந்த சாஸ்தாவை பார்த்ததும் புஷ்கலாவிற்கு ஏதோ ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.
இதனால், ‘‘தந்தையே எனக்கு சோர்வாக உள்ளது, ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் மட்டும் சென்று வாருங்கள். நீங்கள் வரும் வரை நான் இங்கேயே இருக்கிறேன்’’ என கூறிவிட்டார். அங்கிருந்த அர்ச்சகரிடம், தனது மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு வியாபாரி அரண்மனை சென்றார். புஷ்கலா, அர்ச்சகருக்கு உதவியாக இருந்து சாஸ்தாவின் பூஜைக்கு உதவி செய்தார். அப்போது சாஸ்தாவை தனது காதலனாக பாவித்து கொண்டார் (பெருமாள் மீது காதல் கொண்ட ஆண்டாள் போன்று).
பூர்வஜென்ம சாபத்தின் படி வியாபாரி மகளாக பிறந்த புஷ்கலாவை தனது மனைவியாக ஆட்கொண்டு சாப விமோசனம் அளிப்பதற்காக சாஸ்தாவும் புஷ்கலாவின் காதலை ஏற்றார். இதனை தொடர்ந்து வியாபாரி ஆரியங்காவு திரும்பினார். இதனை அறிந்த சாஸ்தா தனது வாகனமான யானையை விட்டு துரத்தினார். அப்போது வேடன் போன்று வேடமணிந்து சென்ற சாஸ்தா, பயந்தோடிய வியாபாரியை காப்பாற்றுகிறார். தன்னை காப்பாற்றிய உனக்கு என்ன சன்மானம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் வியாபாரி.
உனது மகளை எனக்கு திருமணம் முடித்து தரமுடியுமா எனக் கேட்கிறார். அதற்கு வியாபாரி சம்மதம் தொவித்தார். அப்போது திடீரென மறைந்து போனார் வேடனான சாஸ்தா. நடப்பது புரியாமல் தனது மகளை தேடி கோயில் வந்தார் வியாபாரி. அங்கு தனது மகளை தேடினார். காணவில்லை. அர்ச்சகரை தேடி கோயிலில் சென்று பார்க்கும் போது சிலையாக அந்த வேடனும் அருகில் தனது மகள் புஷ்கலாவும் திருமண கோலத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நடப்பதை பார்த்த அர்ச்சகர், புஷ்கலாவின் முன்ஜென்மம் குறித்து எடுத்துரைத்தார். அதன்படி வியாபாரி சாஸ்தாவிற்கு சம்மந்தியானார். அன்று முதல் இன்று வரை மதுரையில் இருந்து பெண் வீட்டார் சடங்கு முறைப்படி திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. சாஸ்தாவும் திருமணகோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சாமியே சரணம் ஐயப்பா, நாளையும் தரிசிப்போம்
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
9.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 46: ஆரியங்காவு appeared first on Dinakaran.