- சாலை முற்றுகை
- மன்னார்குடி
- நாதம் தமிழர்
- ஞானசேகரன்
- கோட்டூர்புரம்
- அண்ணா பல்கலைக்கழகம்
- கிண்டி, சென்னை
- சாலை
- இல்
- தின மலர்
மன்னார்குடி, ஜன. 1: சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாநில முழுவதும் பல்வேறு அமைப்பினர் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்துஅந்த பகுதிக்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீ சார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சீமான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன் னார்குடி பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று மதியம் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து டிஎஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், டவுன் எஸ்ஐக்கள் முருகன், விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மாநில பொருளா ளர் மருத்துவர் பாரதிச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேதா பா லா உள்ளிட்ட 35 பேர் களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
The post மன்னார்குடியில் சாலை மறியல்; நாம் தமிழர் கட்சியினர் 35 பேர் கைது appeared first on Dinakaran.