×

ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அதானிக்கு வழங்கப்பட இருந்த ஒப்பந்தம் ரத்தானது மகிழ்ச்சி: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்பட இருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது. அவ்வாறு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டால், மக்களின் பணம் அதானி குழுமத்திற்கு பதிலாக இன்னொரு நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்படுவதற்கு தான் வழிவகுக்கும்.

எனவே, அந்த முடிவை கைவிட்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும். அதேபோன்று, அதானி குழும நிறுவனம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

The post ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அதானிக்கு வழங்கப்பட இருந்த ஒப்பந்தம் ரத்தானது மகிழ்ச்சி: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Adani ,Chennai ,Tamil Nadu Electricity Board ,Adani Group Company ,Meter ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!