- அல்லு அர்ஜுன்
- ஆந்திரப் பிரதேசம்
- துணை முதலமைச்சர்
- திருமலா
- ரேவதி
- சந்தியா சினிமா
- ஹைதராபாத், தெலுங்கானா
- பவன் கல்யாண்
- குண்டூர்…
திருமலை,: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படத்தின் பிரீமியர் ஷோவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குண்டூரில் அளித்த பேட்டி: தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி ஒரு சிறந்த தலைவர்.
புஷ்பா படத்திற்கான சிறப்பு காட்சி டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த அனுமதி அளித்தார். அல்லுஅர்ஜுன் சம்பவத்தில் முன்னும் பின்னும் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. கலைஞர்களுக்கு ஒரு பாராட்டு, விருது விலைமதிப்பற்றது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது படம் வெளியாகும்போது முககவசம் அணிந்து தியேட்டருக்கு செல்வார். நானும் அதே வழியில் சென்ற காலங்களும் உண்டு. ஆனால் தற்போது நாங்கள் தியேட்டருக்கு செல்வதை நிறுத்திவிட்டோம்.
கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்துள்ளார். அவரது மகன் தேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களது வீட்டுக்கு அல்லு அர்ஜுனோ அவர் சார்பில் யாராவதோ சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்கள் இருக்கிறோம் என்பதை அந்த குடும்பத்திற்கு முன்பே ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். இந்த சம்பவத்தால் அல்லுஅர்ஜுனும் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுனை மட்டுமே குற்றவாளி போன்று காண்பிக்கப்படுவது சரியல்ல என்றார்.
The post ‘புஷ்பா’ பட கூட்ட நெரிசலில் பெண் இறந்த விவகாரம்; பலியான ரசிகை வீட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் சென்றிருக்கலாம்: ஆந்திர துணை முதல்வர் ஆதங்கம் appeared first on Dinakaran.