அதே மாதிரி நான்கைந்து பேர் இருந்து இருப்பார்கள். ஒருவர் அரசியலுக்கு புதிதாக இருக்கலாம். அரசியலே தெரியாத ஒரு கோமாளியாக இருக்கனும் என்றால் அது அண்ணாமலை தான். இது ஒரு பைத்தியக்காரத்தனமான விஷயம். கோமாளித்தனம் என்று சொல்ல வேண்டும். அண்ணாமலையை தலைவராக செலக்ட் பண்ணுனவங்க தான் தன்னத்தானே சவுக்கால் அடித்து கொள்ள வேண்டும். இனி அண்ணாமலை வாழ்க்கையில் செருப்பே போட மாட்டார். ஆட்சி அமைக்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் நான் செருப்பு போட மாட்டேன். வேட்டி கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால் இன்னும் டேஞ்ஜராகி இருக்கும். பட்டாப்பட்டியோட அலைய வேண்டியதாக ஆகியிருக்கும்.
தமிழ்நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு அண்ணாமலை. அவர் சவுக்கால் அடித்ததை பார்த்து எங்கள் வீட்டில் பயங்கர காமெடி. குழந்தைகளுக்கு எல்லாம் பிடித்த இந்த சவுக்கடி சீனை எல்லா காமெடி சேனலில் போட்டால் அண்ணாமலைக்கு பிரபலத்தன்மை கிடைக்கும். இன்னும் காரிகாரி அவரை துப்புவாங்க. அவர் நல்ல அரசியல்வாதி தான். துப்பு துடைத்து கொள்கிறேன் என்கிற மாதிரி தான் இருக்கிறார். இதனால், அண்ணாமலையின் ஒவ்வொரு செய்கையும், ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு தடவையும் 100 ஓட்டு, 1000 ஓட்டு பிஜேபியில் இருந்து வெளியே வந்துகொண்டு இருக்கிறது” என்றும் அவர் பேட்டியில் கூறியிருந்தார்.
அண்ணாமலை பற்றி கடுமையாக விமர்சித்ததற்காக பாஜகவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த பின்னர் நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டியில், ‘‘அண்ணாமலை பற்றி விமர்சித்ததற்காக பாஜகவினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது” என்றார்.
The post அண்ணாமலை பற்றி கடும் விமர்சனம்; நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.