சென்னை: அருவருப்பு அரசியல் செய்கிற சேடிஸ்ட் மனநிலையை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார். அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் பழனிசாமி இறங்கியிருக்கிறார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் என்பார்கள், ஆனால் பழனிசாமியின் புளுகு ஒருநாள் கூட நீடிப்பதில்லை. அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படையான நேர்மையான நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
The post சேடிஸ்ட் மனநிலையை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி காட்டம் appeared first on Dinakaran.