×

திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை: அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை முயற்சி

திருத்தணி: திருத்தணியில், பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம கும்பல் ஒரு வீட்டில் 25 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அருகிலுள்ள 3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலை, பாலாஜி நகரில் சப்தகிரி நகரில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி(45). அவர் சித்தூர் சாலையில், பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் மருந்து கடை வைத்துள்ளார்.

அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் ராணிப்பேட்டையில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி பீரோவில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையம் பின்புறம் மங்கலங்கிழார் நகரில் காவலர்கள் குடியிருந்து வரும் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

திருத்தணியில் உள்ள அவரது வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்டுள்ள மர்ம நபர்கள் அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளனர். அவரது வீட்டின் அருகில் சாவித்திரி என்ற மூதாட்டி வீடும், அவரது மகள் தேவி ஆகியோர் வீடுகளில் பூட்டு உடைத்துள்ளனர். இருப்பினும் மூன்று வீடுகளில் நகை பணம் இல்லாததால், திரும்பிச் சென்றுள்ளார். ஒரே இரவில் 4 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து திருத்தணி டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடுகளை ஆய்வு செய்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். ரக் ஷித் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்று வீடுகளில், சுற்றுப்புறத்தில் சோதனை நடத்தப்பட்டது. கொள்ளை சம்பவம் தொடர்பாக சுந்தரமூர்த்தி 25 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை: அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Thiruvananthapuram, ,Tiruvallur district… ,
× RELATED நடிகையிடம் அத்துமீறிய 2 நடிகர்கள்: போலீசில் பரபரப்பு புகார்