- முன்னாள்
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி வி.ராமசுப்ரமணியன்
- தேசிய மனித உரிமைகள் ஆணையம்
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- பித்யுத் ரஞ்சன் சாரங்கி
- தின மலர்
புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் கடந்த டிசம்பர் 23 அன்று நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். கடந்த வாரம் உறுப்பினராக பொறுப்பேற்ற பிரியங்க் கனூங்கோ வரவேற்றார். தமிழ்நாட்டின் மன்னார்குடியில் 1958 ஜூன் 30ல் பிறந்த நீதிபதி ராமசுப்ரமணியன், சென்னை விவேகானந்தா கல்லூரியில் பிஎஸ்சி வேதியியலில் பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 23 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றினார். 2006ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் நியமிக்கப்பட்டார். 2009ல் நிரந்தர நீதிபதியான அவர் 2016ல் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 2019ல் இமாச்சல் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக ஆனார். 2023 ஜூன் 29ல் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக பதவி ஏற்றுள்ளார்.
The post தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் பதவிஏற்பு appeared first on Dinakaran.