×

ஆப்கன் 699 ரன் குவிப்பு ஹஸ்மதுல்லா 246

புலவயோ: ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி புலவயோ நகரில் முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன் குவித்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆப்கன் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 515 ரன் எடுத்திருந்தது. ரஹ்மத் ஷா 234 ரன்னில் அவுட்டானார். 5ம் நாளான நேற்று, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி அற்புதமாக ஆடி 246 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அப்சர் ஷஸாய் 113 ரன் எடுத்து அசத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கன் 699 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

The post ஆப்கன் 699 ரன் குவிப்பு ஹஸ்மதுல்லா 246 appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Hashmatullah ,Bulawayo ,Zimbabwe ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே முதல் டெஸ்ட் டிரா