×

மிசோரம் ஆளுநர் வி.கே.சிங் வரும் 9ம் தேதி பதவியேற்பு

அய்ஸால்: மிசோரம் ஆளுநராக இருந்த ஹரிபாபு கம்பம்பதி கடந்த வாரம் மாற்றப்பட்டு ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டார். மிசோரத்தின் ஆளுநராக மாஜி ஒன்றிய அமைச்சரும் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வி.கே. சிங் வரும் 9ம் தேதி ஆளுராக பதவியேற்பார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் லால்டுஹோமா,அமைச்சர்கள், பேரவை சபாநாயகர் லால்பியாக்ஸமா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் 2012 வரை ராணுவ தலைமை தளபதியாக இருந்த அவர் ஓய்வு பெற்ற பின்னர் பாஜவில் சேர்ந்தார். உபி மாநிலம் காசியாபாத் மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 2 முறை ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

The post மிசோரம் ஆளுநர் வி.கே.சிங் வரும் 9ம் தேதி பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Governor ,VK Singh ,Haribabu Kambampati ,Governor of Mizoram ,Governor of ,Odisha ,Former Union Minister ,Army ,VK. Singh ,
× RELATED ஒடிசா ஆளுநர் ராஜினாமா ஏற்பு கேரளா,...