திருத்தணி: ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆந்திர எல்லை பொன்பாடி சோதனை சாவடியில், போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், பேக்கில் மறைத்து வைத்திருந்த சுமார் 15 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக ஆர்கே பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் சென்னை சேர்ந்த முருகன்(44) பூந்தமல்லி கரையான் சாவடியைச் சேர்ந்த ரவி(45) ஆகியோர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கஞ்சா வாங்கி சென்னைக்கு கடத்துவதாக தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.