×

விஜயவாடாவில் நடைபெற்ற கபடி போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம்

திருப்போரூர்: விஜயவாடாவில் நடைபெற்ற கபடி போட்டியில் கோவளம் அரசு பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, பீகார், அரியானா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த போட்டியில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

கடந்த 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கபடி பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து சென்றிருந்த 9, 10ம் வகுப்பு மாணவிகள் சியானா, அபிலேஷா, சிந்துமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர், பள்ளி தலைமையாசிரியர் நக்கீரன், உடற்கல்வி ஆசிரியர் மோகன் ஆகியோர் அலைபேசி மூலம் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். போட்டிகள் முடிந்து மாணவிகள் அனைவரும் இன்று காலை சென்னை திரும்புகின்றனர்.

The post விஜயவாடாவில் நடைபெற்ற கபடி போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Kabaddi ,Vijayawada ,Kovalam Government School girls ,Tamil Nadu ,Andhra Pradesh ,Telangana ,Bihar ,Haryana ,Karnataka ,Vijayawada, Andhra Pradesh… ,
× RELATED தென்காசி கபடி போட்டியில் சங்கரன்கோவில் அணி வெற்றி