×

களியனூர் ஊராட்சியில் பெண்கள் பாதுகாப்பு பயிற்சி முகாம்

 

காஞ்சிபுரம், டிச. 30: காஞ்சிபுரம் மாவட்டம், களியனுர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு பெண்கள், குழந்ததைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் களியனுர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

பெண்களுக்கான பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தைகள் சிறு வயது திருமணம், குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆகியவை குறித்து காஞ்சிபுரம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சுப்பிரமணி மற்றும் சைபர் கிரைம் பிரிவு முதல் நிலைக் காவலர் ராமசாமி, பெண் காவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு கிராம மக்களுக்கு பயிற்சி அளித்து, விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் காவலன் ஆப், போலீஸ் 100, போதைப் பொருள் தடுப்பு பிரிவு 9498100260, பெண்கள் ஹெல்ப்லைன் 181, குழந்தைகள் ஹெல்ப்லைன்-1098, குழந்தைகள் கல்வி ஹெல்ப்லைன் 14417, சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 ஆகிய சேவைகள் பற்றி மக்களுக்கு சிறப்பான முறையில் விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். இந்த பயிற்சி முகாமில் 170 பேர் கலந்து கொண்டனர்.

The post களியனூர் ஊராட்சியில் பெண்கள் பாதுகாப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Kaliyanur panchayat ,Kanchipuram ,Kanchipuram district ,president ,Vadivukkarasi Arumugam ,safety training camp ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...