×

ஊத்து பகுதியில் ஒரே ஆண்டில் 4,616 மிமீ மழை

நெல்லை: மேற்குத் தொடர்ச்சியில் உள்ள ஊத்துமலை கிராமத்தில் இதுவரை 4,616 மி.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்கள் நல்ல மழைப் பொழிவை பெற்றுள்ளன. குறிப்பாக ஊத்து, மணிமுத்தாறு, நாலுமுக்கு, காக்காச்சி போன்ற பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

இவற்றில் ஊத்துமலை பகுதியில் அதிக மழை பெய்து நெல்லை மாவட்டத்தின் சிரபுஞ்சியாக மாறி அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. ஜனவரி 1ம் தேதி தொடங்கி நேற்று வரை மட்டும் மொத்தம் 4,616 மி.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமாக அக்டோபர் 1ல் தொடங்கி நேற்று வரை 2,241 மி.மீ. மழை பெய்துள்ளது.

The post ஊத்து பகுதியில் ஒரே ஆண்டில் 4,616 மிமீ மழை appeared first on Dinakaran.

Tags : Uthu area ,Nellai ,Uthumalai ,Western Ghats ,Nellai district ,Uthu ,Manimutharu ,Nalumku ,Kakkachi… ,Dinakaran ,
× RELATED நெல்லை சந்திப்பு பஸ்நிலைய அண்டர்...