- தென்கிழக்கு அரேபிய கடல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தெற்கு
- மண்டலம்
- செந்தாமரைக்கண்ணன்
- தென் கேரளா
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மண்டல இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் கூறியிருப்பதாவது: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 30ம் தேதி(நாளை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும். 1ம் தேதி முதல் 3ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
The post தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.