- காங்கிரஸ்
- ஆம் ஆத்மி கட்சி
- தில்லி
- சிவசேனா
- புது தில்லி
- சஞ்சய் ரவுத்
- காங்கிரஸ் கட்சி
- டெல்லி சட்டமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: உண்மையான எதிரி யார் என்பதை காங்கிரசும், ஆம்ஆத்மியும் புரிந்து கொள்ள வேண்டும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அட்வைஸ் வழங்கி உள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில், சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தங்களது உண்மையான எதிரி யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகள் மாநில அளவில் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுகின்றன.
அவர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் அங்கமாக இருப்பதை உணர வேண்டும். இருகட்சிகளும் இந்தியா கூட்டணிக்குள் இருப்பதையும், கூட்டணி உறவையும் மனதில் கொள்ள வேண்டும். ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயான போட்டி பழையது. இரு கட்சிகளும் சில தேர்தல்களில் ஒன்றாக போட்டியிட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் சண்டை ஒருவருக்கொருவர் எதிரானதா? அல்லது பாஜகவுக்கு எதிரானதா? என்பதை இரு கட்சிகளும் மனதில் கொள்ள வேண்டும். நமது எதிரி காங்கிரஸ் கட்சியா? பாஜகவா? என்பதை ஆம்ஆத்மி உணர வேண்டும்.
அதேபோல் காங்கிரசும் உணர வேண்டும். இருவருக்கும் எதிரி யார் என்று தெரியவில்லை என்றால், அது முட்டாள்தனமாக இருக்கும்’ என்று கூறினார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஆம் ஆத்மி – காங்கிரஸ் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகளுக்கு எதிராக 24 மணி நேரத்திற்குள் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆம்ஆத்மி கேட்டுக் கொண்டது. காங்கிரஸ் கட்சி அவ்வாறு செய்யாவிட்டால், அக்கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஆம்ஆத்மி தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post டெல்லி தேர்தலில் மோதல் உண்மையான எதிரி யார் என்பதை காங்கிரசும் ஆம்ஆத்மியும் புரிந்து கொள்ள வேண்டும்: சிவசேனா தலைவர் அட்வைஸ் appeared first on Dinakaran.