புதுடெல்லி: பஞ்சாபின் பதிண்டா நகர் அருகே கால்வாயில் பஸ்விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பஞ்சாபின் சர்துல்கர் என்ற இடத்தில் இருந்து பதிண்டா மாநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஜிவான் சிங் வாலா என்ற கிராமத்தில் பாலத்தின் மீது மோதி பின்னர் கால்வாயில் விழுந்தது.
இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பயணிகள் பதிண்டா நகரில் உள்ள ஷாஹீத் பாய் மணி சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post பஞ்சாப் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி appeared first on Dinakaran.