×

புது பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து சென்ற பஸ்களுக்கு அபராதம்

 

விருதுநகர், டிச.28: விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை புறக்கணித்து சென்ற பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விருதுநகர் சாத்தூர் ரோட்டில் 1992ல் புதிய பஸ் நிலையம் கட்டி திறக்கப்பட்டது. திறக்கப்பட்டு 32 ஆண்டுகளாகியும் புதிய பஸ் நிலையம் முழுமையாக செயல்படுத்த இயலாத நிலை இருந்து வந்தது. இந்நலையில் விருதுநகர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆக.21 முதல் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது.

விருதுநகர் புது பஸ் நிலையத்திற்கு வராமல் பைபாஸ்களில் செல்லும் தொலைதூர பேருந்துகள் முழுமையாக புதிய பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவை மீறி பல பஸ்கள் புதிய பஸ் நிலையத்தை புறக்கணித்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலையில் நேற்று காலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராசு தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அப்போது புதிய பஸ் நிலையத்தை புறக்கணித்து சென்ற 5க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினார்.

The post புது பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து சென்ற பஸ்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sattur Road ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால்...