கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய தோட்டத்தில் உலாவரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பண்ணார் வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வெளியேறி வருகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தற்போது ஜவளகிரி தேன்கனி கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை வனப்பகுதியில் புகுந்துள்ளனர்.
அந்த வகையில் தேன்கனி கோட்டை அருகே உள்ள புதூர் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் 2 யானைகள் உலா வந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பின்னர் அந்த பகுதியினர் சத்தம் எழுப்பியதால் 2 யானைகளும் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது. இருப்பினும் யானைகள் குடியிருப்பு பகுதியில் மீண்டும் வராத வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஓசூர் அருகே விவசாய தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகள்: வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.