கன்னியாகுமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் இடையே இணைப்பு பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதற்கான கண்ணாடி பொருத்தும் பணி இன்று நண்பகல் தொடங்குகிறது. கன்யாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு தொடக்க விழா வருகின்ற 30,31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் அரசு விழாவாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணிகள் இன்று நண்பகல் தொடங்கி நாளை வரை நடைபெற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கண்ணாடிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இணைப்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டு கண்ணாடிகள் அமைப்பதற்கான 11 சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாலத்தின் நடுவே கண்ணாடிகள் அமைக்கும் பணி இன்று தொடங்குகிறது.
The post குமரி திருவள்ளூவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணி இன்று தொடக்கம்..!! appeared first on Dinakaran.