×

சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க வைப்பது டிரெண்டாக மாறி வருகிறது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க வைப்பது ஒருவகை டிரெண்டாக மாறி வருகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்றும், சிரமப்பட்டு எடுக்கும் திரைப்படங்களை தடை செய்யக் கோருவது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். சொர்க்கவாசல் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி தவறாக சித்தரித்ததாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

The post சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க வைப்பது டிரெண்டாக மாறி வருகிறது: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,MADURAI ,MADURAI BRANCH ,HIGH COURT ,iCourt branch ,Chennai ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி